இந்தியா கடுமையான நெருக்கடியை அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர்களுக்கு ஏற்படுத்தியது.
இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 4 வதும் இறுதியான டெஸ்ட் போட்டியில் இன்று முதலில் ஆடிய அவுஸ்திரேலிய அணி 5 விக்கெட்களை இழந்து 274 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அனுபவமற்ற பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கிய இந்திய அணி முதல் நாளில் கடுமையான நெருக்கடியை அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர்களுக்கு ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
தமிழக வீரர்களான நடராஜன் மற்றும் வொஷிங்டன் சுந்தர் ஆகியோர் இன்றைய போட்டியில் அறிமுகம் மேற்கொண்டனர்.