அறநெறி பாடசாலைகள் இன்று முதல் ஆரம்பம்.
மேல் மாகாணத்தைத் தவிர நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள அறநெறிப் பாடசாலைகள் இன்று முதல் ஆரம்பமாகின்றன.
பௌத்த, இந்து மற்றும் ஏனைய மதங்களை போதிக்கின்ற அறநெறிப் பாடசாலைகளை இன்று முதல் ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு அனுமதி அளித்துள்ளது.
இந்த நிலையில் மேல்மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளை தவிர்ந்த ஏனைய பகுதிகளில் உள்ள அறநெறி பாடசாலைகள் இன்றைய தினம் முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இந்த பாடசாலைகளில் உரிய சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என சுகாதார சேவைகள் பணியகம் அறிவித்துள்ளது.
இதற்கான அறிவுறுத்தல்கள் அனைத்து அறநெறி பாடசாலைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.