இந்தியாவில் Tik Tok உள்ளிட்ட 59 செயலிகளுக்கு தடை
இந்தியாவில் Tik Tok, WeChat உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
கடந்த 15 ஆம் திகதி லடாக் எல்லையில் இந்திய மற்றும் சீன இராணுவத்தினரிடையே இடம்பெற்ற மோதலில் 20 இந்திய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதனை அடுத்து சீனாவுக்கு பொருளாதார ரீதியாக பதிலடி கொடுக்கும் முகமாக இந்திய மத்திய அரசினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சீனாவுடன் தொடர்புடைய குறித்த செயலிகள், இந்திய இறையாண்மை மற்றும் இந்திய குடிமக்களின் அந்தரங்க தகவல்களை பாதிக்கும் வகையில் உள்ளதாக இந்திய சட்டமன்ற உறுப்பினர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நடவடிக்கை தொடர்பில் விளக்கமளிப்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 4 மணிக்கு மன்கி பாத் நிகழ்ச்சியூடாக மக்களிடையே உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.