விஜய் டிவி : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கு தேதி குறித்தாகிவிட்டது
பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி முடிந்து சில நாட்கள் கூட ஆகாத நிலையில் தற்போது அடுத்த சீசனுக்கான வேலையில் மும்மரமாக களம் இறங்கி விட்டதாம் விஜய் டிவி. கடந்த சீசனில் வந்த எதிர்மறை கருத்துக்களை எல்லாம் இந்த முறை சரியாக செய்து விடவேண்டும் என கவனமாக உள்ளார்களாம்.
முதல் 3 சீசன்களை விட சமீபத்தில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி தான் மிகவும் சுவாரஸ்யம் இல்லாத சீசன் என மக்கள் பலரும் தொடர்ந்து கருத்து தெரிவித்த நிலையில் தற்போது அதை மாற்றுவதற்காக போட்டியாளர்களை அதிக கவனத்துடன் தேர்வு செய்ய உள்ளார்களாம்.
வழக்கம்போல் இந்த முறையும் கமலஹாசனே நிகழ்ச்சியை தொகுத்து வழங்க அதிக வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் விஜய் டிவி வட்டாரங்கள். அதுமட்டுமில்லாமல் முதல் 10 பிக் பாஸ் சீசன்களுக்கான மொத்த உரிமையையும் விஜய் டிவிதான் வாங்கி உள்ளதாம்.
இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி வருகின்ற ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் கட்டாயம் தொடங்கப்படும் என விஜய் டிவி வட்டாரங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. கடந்த முறையே கொரானா பிரச்சினை காரணமாகத்தான் தள்ளி வைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அது மட்டுமில்லாமல் கடந்த சீசனில் விஜய் டிவியில் பார்த்து சலித்த பல முகங்களை களமிறங்கியது தான் விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் தோல்விக்கு காரணம் என கருத்துக்கள் வந்ததால் தற்போது அடுத்த சீசனில் ஒரு விஜய் டிவி பிரபலம் கூட வரக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்களாம்.