இந்தியா சார்பில் இலங்கைக்கு நன்கொடையாக கொரோனா தடுப்பு மருந்து.
இந்தியா சார்பில் இலங்கைக்கு 5 லட்சம் முறை செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து நன்கொடையாக வழங்கப்பட உள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பு மருந்துகள் நல்லெண்ண அடிப்படையில் அண்டை நாடுகளுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் இலங்கைக்கு 5 லட்சம் முறை செலுத்தும் அளவுக்கு கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் வரும் 27ஆம் தேதி வந்து சேரும் என ஜனாதிபதி கோத்தபாய ராஜபட்ச தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு மருந்துகளை இந்தியாவிடமிருந்து நன்கொடையாகப் பெறும் எட்டாவது நாடு இலங்கை ஆகும். ஏற்கெனவே பூடான், மாலைத்தீவுகள், நேபாளம், வங்கதேசம், மியான்மர், செச்செல்ஸ், மொரீசியஸ் ஆகிய நாடுகளுக்கு நன்கொடையாக கொரோனா தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.