கொவிட் 19 – 6 மாதங்களை கடந்தும் ஒழிக்க முடியவில்லை – WHO
கொவிட் – 19 வைரஸ் பரவ ஆரம்பித்து 6 மாதங்கள் சென்றுள்ள நிலையில் அது ஒழிக்கப்படும் நிலைக்கு இன்னும் வரவில்லையென உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் எடனம் இந்த தகவலை நேற்றைய தினம் தெரிவித்துள்ளார்.
PCR பரிசோதனைகள், தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் தொடர்ந்து பின்பற்றப்பட வேண்டுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
213 நாடுகள் மற்றும் சுயாட்சி பிரதேசங்களில் கொரோனா தொற்று நோய் பரவியிருப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments are closed.