அரசுக்கு அமைச்சர்கள் ஒத்துழைப்பு வழங்காவிடின் பேரழிவுதான் மிச்சம் ஜோன்ஸ்டன் எச்சரிக்கை.
அரசுக்கு அமைச்சர்கள் ஒத்துழைப்பு
வழங்காவிடின் பேரழிவுதான் மிச்சம்
ஜோன்ஸ்டன் எச்சரிக்கை.
“ஜனாதிபதியும், அரசும் ஒரு தீர்மானத்தை எடுத்தால், அமைச்சர்கள் அனைவரும் அந்தத் தீர்மானத்துடன் ஒன்றாக இணைந்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாது வேறு நோக்கங்களின் பின்னால் செல்ல முயற்சிப்பது பெரிய அழிவை ஏற்படுத்தக்கூடும்.”
இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ.
கொழும்பில் இன்று ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது
“ஜனாதிபதி, தீர்மானம் ஒன்றை எடுத்தால், அரசு ஒரு தீர்மானத்தை எடுத்தால், அமைச்சர்கள் அனைவரும் அந்தத் தீர்மானத்துடன் இணைந்திருக்க வேண்டும். அதனை விடுத்து, பறக்கும் பட்டங்ளை உருவாக்கி, அதன் ஊடாக சென்றால் மிகப் பெரிய அழிவு ஏற்படும்.
எதிர்க்கட்சிகள் பறக்கும் பட்டங்களை அனுப்புகின்றன. அமைச்சர்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.
இந்த நாட்டு மக்கள் மாபெரும் வெற்றியுடன் ஜனாதிபதியை அரியணையில் ஏற்றினார்கள்.
நாட்டுக்கேற்ற நல்ல பிரதமரை நியமித்து – வலுவான அரசை அமைத்து சரியான முடிவுகளை ஜனாதிபதி எடுக்கும்போது, அந்தத் தீர்மானங்களுடன் அமைச்சர்கள் இணைந்திருக்க வேண்டும்.
பௌத்த பிக்குகள் தலைமையேற்று ஜனாதிபதிக்கும் அரசுக்கும் ஆலோசனைகளை வழங்குதைத் தவறான நான் காணவில்லை.
எனினும், சில நேரங்களில் பௌத்த பிக்குகள் சிலரை எதிரணியினர் தூண்டி விடுகின்றனர். இந்த விடயத்தில் நாம் கவனமாக இருக்க வேண்டும்”என்றார்.