இரு பாடசாலைகளில் விஞ்ஞான ஆய்வு கூடம் மற்றும் வகுப்பறைக்கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.
கிளிநொச்சி மகா வித்தியாலயம் கிளிநொச்சி ஆரம்ப வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறை கட்டிடம் மற்றும் விஞ்ஞான ஆய்வுகூடம் என்பன வடமாகாண ஆளுநர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
(26-01-2021) கிளிநொச்சிக்கு விஜயம் செய்த வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சாள்ஸ் கிளிநொச்சி ஆரம்ப வித்தியாலயத்தில் 2019 ஆம் ஆண்டின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட இரு மாடி வகுப்பறைக்கட்டிடத்தொகுதி மற்றும் தேசிய நல்லிணக்கத்துக்கும் ஒருமைப்பாட்டுக்குமான அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் 2019ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட உயர்தர மாணவர்களுக்கு உரிய விஞ்ஞான செயன்முறை ஆய்வுகூடத்தினையும் திறந்து வைத்துள்ளார்.
நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் அவர்கள் கல்வி அமைச்சின் செயலாளர்
மற்றும் உயர் அதிகாரிகள் கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.