நீதிமன்ற அனுமதியுடன் பெருந்தொகையான வெடி பொருட்கள் மீட்பு.
முல்லைத்தீவில் நீதிமன்ற அனுமதியுடன் பெருந்தொகை குண்டுகள் மீட்பு.
முல்லைத்தீவு நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் நேற்று (28) மதியம் 12.30 முள்ளியாவலை பொலிஸ் நிலையத்தின் 592 வது பிரிகேட் ,பொலிஸ் நிலையத்தின் 9 வது கள பொறியியல் பிரிவு என்பன கூட்டாக இணைந்து 152 மி.மீ அளவான 110 பீரங்கி குண்டுகளையும், 122 மி.மீ அளவிலான முப்பத்து ஆறு பீரங்கி குண்டுகள், நாற்பத்தொன்பது 152 மிமீ பீரங்கி குண்டுகள் , 122 மி.மீ குண்டுகள், 10 பியூஸ்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
இவை 2009 ஆண்டுக்கு முன்பாக புதைக்கப்பட்டவையாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
இது தொடர்பான வழக்கு விசாரணைகள் கடந்த திங்கட்கிழமை (25) இடம்பெற்றிருந்த நிலையில், அவசியமான சகல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடனும் புதைக்கப்பட்ட குண்டுகளை தோண்டி எடுக்க படைகளுக்கு அனுமதி வழங்குமாறு பொலிஸார் முன்வைத்த கோரிக்கைகளின் பிரகாரம் அவற்றை தோண்டுவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.
அதனை தொடர்ந்து முள்ளியவளை பொலிஸ் நிலையத்தின் ஊடாக இது தொடர்பான விசாரணைகளும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.