மிஹிந்து நிவஹன வீடமைப்புத் திட்டம் இன்று ஆரம்பம்.
மிஹிந்து நிவஹன வீடமைப்புத் திட்டம் மொனறாகலை சியம்பலாண்டுவ பிரதேசத்தில் இன்று ஆரம்பம்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இது இடம்பெறவுள்ளது. இதன் போது தெரிவு செய்யப்பட்ட வர்களுக்கான வீட்டு நிர்மாணப் பணிகள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளன. இதேவேளை, தெரிவு செய்யப்பட்டட மேலும் 50 பெற்றோர்களுக்கு ஒரு லட்சம் ரூபா வீதம் நிதி வழங்கப்பட இருக்கின்றது.
பிரதமரின் தீர்மானத்திற்கமைவாக, சங்கைக்குரிய தேரர்களின் பெற்றோர்களுக்காக இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் இந்த வருடத்தில் இரண்டாயிரம் வீடுகளை நிர்மாணிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 120 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.