“சிங்கள பெளத்தம் மட்டுமே” இலங்கை அல்ல : மனோ அரசுக்கு சொன்ன அறிவுரை
சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் வாழும், சிங்கள, தமிழ், மொழிகளை பேசும் பெளத்த, இந்து, இஸ்லாம், கத்தோலிக்க மதங்களை பின்பற்றும் இலங்கை என்ற நாட்டை உருவாக்கவே நாம் முயல்கிறோம். அது எம் நோக்கம் .
ஆனால், தூரதிஷ்டவசமாக ஜனாதிபதியின் அரசு, இந்நாட்டில் “சிங்கள பெளத்தம் மட்டுமே” என்ற நாட்டை உருவாக்க பார்க்கிறது. அது பிழை. அது அவருக்கு புரியவில்லை.
இந்நாட்டின் வரலாற்றில் தமிழருக்கு உரிமை உண்டு. வடக்கு, கிழக்கில் பெளத்த புராதன சின்னங்கள் இருப்பதாக சொல்கிறார்கள். ஆம், இருக்கலாம். ஆனால், அவை தமிழ் பெளத்த புராதன சின்னங்கள். இந்நாட்டில் 2ம், 3ம் நூற்றாண்டுகளில் தமிழர் மத்தியில் பெளத்தம் பரவி இருந்தது. தென்னிந்தியாவிலும் அப்படிதான்.
ஆகவே பெளத்தத்துக்கு “சிங்களம்” என்ற லேபலை போட வேண்டாம். தமிழ் மக்களை அரவணைக்க பெளத்தத்தை பயன்படுத்தும்படி ஜனாதிபதிக்கு கூறுகிறேன்.
ஜனாதிபதிக்கு இது புரியாவிட்டால், நான் ஒன்றும் செய்ய முடியாது. அவருக்கு புரியாததை, அவருடன் இருக்கும், தமிழ் அரசியலர்களான டக்லஸ் தேவானந்தா, அங்கஜன், வியாழேந்திரன், பிள்ளையான் போன்ற எம்பீக்கள், அமைச்சர்கள் சொல்லித்தர வேண்டும். அமைச்சர் அலி சப்ரியும் சொல்லித்தர வேண்டும்.
தெரியாவிட்டால், சொல்லித்தர வேண்டுமல்லவா? இவற்றை ஜனாதிபதி அறிந்துக்கொள்ள வேண்டும். இதுதான் ஜனாதிபதிக்கு எங்கள் செய்தி. இதை அவருக்கு கொண்டு போய் சொல்லுங்கள். நாம் நாட்டை உருவாக விளைகிறோம். அவரது அரசு நாட்டை அழிக்க விளைகிறது என பொத்துவில் முதல் பொலிகண்டி வரை நடை பயணத்தில் கலந்து கொண்ட மனோ கணேசன் பா.உ. அவரது பேச்சை வீடியோ பதிவு செய்த போலீஸ் அதிகாரி ஊடாக தனது கருத்தை நாட்டு தலைமைகளுக்கு தெரிவித்துள்ளார்.
#P2P – முறிகண்டியில் என்னை வழிமறித்த ஊடக நண்பர்களிடம் தமிழில் பேசிபோது…
பக்கத்திலே #இலங்கை #பொலிஸ் தம்பி என் உரையை மிகுந்த கடமை உணர்வுடன் பதிவு செய்கிறாராம்… #lka pic.twitter.com/7BzwJuPwiV— Mano Ganesan (@ManoGanesan) February 7, 2021
#P2P උතුරේදී මාගේ කතාව “රෙකෝඩ්” කරපු #SriLankaPolice නිලධාරී හරහා අපේ ආණ්ඩුවට මා යවපු පණිවිඩය #lka pic.twitter.com/eps9dzRdLH
— Mano Ganesan (@ManoGanesan) February 7, 2021