நோட்டுகளை அச்சிட்டு பயணில்லை, பொருளாதாரத்தை மீட்க IMFயை நாடுவதே வழி: ஹர்ச டி சில்வா
பண நோட்டுகளை அச்சிடுவதால் நாட்டின் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது என எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.
அதனால் அரசாங்கத்திற்கு இருக்கும் ஒரே வழி சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முன்வருவதாகும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.
பணம் அச்சிடுவதன் மூலம் இலங்கை ரூபாவிற்கான டொலர் பெறுமதி அதிகரிக்கும். அதனால் ரூபாவின் பெறுமதியை தக்க வைத்துக் கொள்ள முடியாது போகும் என ஹர்ச சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த வருடத்தில் 6 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் செலுத்த வேண்டியுள்ளதாக மத்திய வங்கி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனை இவ்வாறு செலுத்துவது என ஹர்ச கேள்வி எழுப்பினார்.
கடன் பெற்றுக் கொண்ட தரப்புக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்த பிரச்சினைக்கு முடிவு கட்ட வேண்டியதுடன் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியையும் நாட வேண்டும் எனக் கூறிய ஹர்ச டி சில்வா, அவ்வாறு இன்றேல் நாட்டு மக்கள் மீதே அதிக சுமைகள் சுமத்தப்படும் எனவும் பாராளுமன்றில் உரையாற்றினார்.