புகையிரத பயணங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் திணைக்களம் தெரிவிப்பு.
கட்டுநாயக்க மற்றும் புத்தளம் புகையிரத நிலையங்களுக்கு இடையிலான புகையிரத பயணங்கள் எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரையில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் ரயில்வே திணைக்களம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
புத்தளம் புகையிரத பாதையின் குரண மற்றும் நீர்கொழும்பு புகையிரத நிலையங்களுக்கு இடையில் இரட்டை வழி பாதை அபிவிருத்தி காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், குரண மற்றும் நீர்கொழும்பு இடை யேயான புகையிரத பாதை 26 ஆம் திகதி காலை 8.00 மணி முதல் 28 ஆம் திகதி இரவு 8.30 மணி வரை மூடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த காலப்பகுதியில் கட்டுநாயக்க மற்றும் புத்தளம் புகையிரத நிலையங்களுக்கு இடையே புகையிரத சேவை முன்னெடுக்கப்படாத காரணத்தினால், கொழும்பு கோட்டை மற்றும் கட்டுநாயக்க புகையிரத நிலையங்களுக்கு இடையில் மட்டுமே புகையிரத சேவை இயக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.