பாடசாலையின் ஆசிரியை ஒருவருடைய தாயாருக்கு கொரோனா திரும்பி அனுப்பப்பட்ட மாணவர்கள்.

யாழ்.மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரியில் இன்று பாடசாலைக்கு சென்ற மாணவர்கள் திருப்பி அனுப்பபட்டுள்ளனர்.
குறித்த பாடசாலையின் ஆசிரியை ஒருவருடைய தாயாருக்கு கொரோனா தொற்று உறுதியனதை தொடர்ந்து மாணவர்கள் திருப்பி அனுப்பபட்டுள்ளனர்.
நேற்றய தினம் சாவகச்சேரி வைத்தியசாலையில் காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்ட நிலையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள பெண் குறித்த பாடசாலை ஆசிரியை ஒருவரின் தாய் எனவும் கூறபடுகின்றது.
இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்றைய தினம் பாடசாலைக்கு சென்றிருந்த மாணவர்கள் வீடுகளுக்கே திருப்பி அனுப்பபட்டுள்ளனர்