உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கை பாராளுமன்றில் சமர்ப்பிப்பு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை சபை முதல்வரும் அமைச்சருமான தினேஸ் குணவர்தனவினால் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
சிங்களம் மற்றும் ஆங்கில மொழியிலான பிரதிகள் இவ்வாறு சமர்ப்பிப்பதாக அமைச்சர் கூறினார்.
இந்த அறிக்கை தொடர்பில் 3 விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சியின் பிரதம கொரோடாவும் பாராளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் தினேஸ் குணவர்தன கட்சி தலைவர்களின் கூட்டத்தில் இதுதொடர்பாக கலந்துரையாடி இதற்கான சந்தர்ப்பத்தை பெற்றுக்கொடுப்பதற்கு ஆளுங்கட்சி தயாராக இருப்பதாக தெரிவித்தார்.