பேரூந்து மற்றும் மீன்பிடிப் படகுகளை கடலில் மூழ்கடிப்பு.
கடலில் மீன்களின் எண்ணிக்கையை
அதிகரிக்கும் நோக்கில் நிராகரிக்கப்பட்ட
பஸ்கள் மற்றும் மீன்பிடிப் படகுகளை கடலில் மூழ்கடிக்கும் மற்றொரு திட்டம் நேற்று காலி மீன்வளத் துறைமுகத்தில்
முன்னெடுக்கப்பட்டது.
இந் நிகழ்வு மீன்வளத்துறை இராஜாங்க
அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின்
ஆதரவின் கீழ் நடைபெற்றது.
இதன்போது அப்புறப்படுத்தப்பட்ட பஸ்கள் மற்றும் மீன்பிடிப் படகுகள் சாயுர கப்பல் மூலமாக காலி துறைமுகத்திலிருந்து 5 கிலோ மீற்றர் தூர கடற்பரப்பிற்கு கொண்டு
செல்லப்பட்டு, மூழ்கடிக்கப்பட்டது.
சிறிய மீன்களின் இனப்பெருக்கத்திற்கு
உகந்த சூழலை உருவாக்குவதே இந்
திட்டத்தின் நோக்கம் ஆகும்.
கடற்படையின் மேற்பார்வையின் கீழ் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டமையும்
குறிப்பிடத்தக்கது.