சுயதொழில் முயற்சியாளர்களுக்கான கடன் திட்டத்திற்கு மத்திய வங்கி ஒப்புதல்
கொவிட் – 19 வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள சுயதொழில் மற்றும் தனிப்பட்டவர்களுக்கான கடன் திட்டத்திற்கு மத்திய வங்கி ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
ஒரு பில்லியன் ரூபாவுக்கும் குறைவான வருடாந்த புரள்வுடன் கூடிய தொகையை குறித்த தொழில் முயற்சியாளர்கள் இதனூடாக பெற்றுக்கொள்ளலாம்.
இதன்படி 20 ஆயிரத்து 240 வியாபாரங்களுக்கான 53 பில்லியன் ரூபா 4 சதவீத வட்டியுடன் வழங்கப்படவுள்ளது.
சௌபாக்கியா கொவிட் – 19 மறுமலர்ச்சி கடன் திட்டத்தின் மூலம் நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளுக்கு புத்துயிர் அளிப்பதற்காகவே இச்செயற் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
Comments are closed.