மைத்ரியால் ஶ்ரீ.சு.கட்சிக்குள் பிளவு! இரண்டாக சிதறும் அபாயம் ….
ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் விசாரணை அறிக்கை காரணமாக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மீண்டும் இரண்டாக பிளவுபடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்த முன்னாள் ஜனாதிபதி, ஶ்ரீலங்கா சுதந்திர கட்சித் தலைவர் மைத்திரிபால சிறிசேன ஆணைக்குழு நியமித்தார்.
ஆனால் அந்த ஆணைக்குழு மைத்திரிபால சிறிசேன மீது குற்ற வழக்கு தாக்கல் செய்ய விசாரணையில் பரிந்துரை செய்துள்ளது.
இதனால் குறித்த விசாரணை அறிக்கையை நிராகரிக்க ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளது.
இந்நிலையில் மைத்திரிபால சிறிசேன மீது நடவடிக்கை எடுத்தால் ஆளும் பொதுஜன பெரமுன கூட்டணியில் இருந்து விலக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி முடிவு செய்திருப்பதாக அறிய முடிகிறது.
எனினும் குறித்த கட்சி சார்பில் பாராளுமன்றில் உள்ள 17 உறுப்பினர்களில் பெரும்பாலானோர் அரசாங்கத்தில் இருந்து விலக விருப்பம் தெரிவிக்கவில்லை எனவும் ஶ்ரீசுக விலகினாலும் அவர்கள் தாமரை மொட்டு கட்சியுடன் இணைந்து செயற்பட முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.