துணுக்காய் பிரதேச செயலர் பிரிவில் கிராமிய விளையாட்டு மைதானம் அமைத்தல் வேலைத் திட்டம் ஆரம்பம்.
கிராமிய விளையாட்டு மைதானம் அமைத்தல் வேலைத்திட்டம் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவில் ஆரம்பித்து வைப்பு!
கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சினால் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் 332பிரதேச செயலர் பிரிவுகளின் கிராமங்களில் உள்ள கிராமிய விளையாட்டு மைதானங்களை அமைக்கும் தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் ஆரம்ப அங்குரார்ப்பண நிகழ்வு இன்று(02) முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவின் மல்லாவி கிராம சேவகர் பிரிவின் மல்லாவி மத்திய கல்லூரி கூடைப்பந்தாட்ட மைதானத்தில் காலை 10.25மணிக்கு இடம்பெற்றது.
அரசாங்கத்தின் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைக்கமைய செம்மையான முன்னேற்றம் மிக்க இளைஞர்களை உருவாக்குவோம் செயற்திட்டத்தின் கீழ் 1.5 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் கீழ் அமையப்பெறவுள்ள குறித்த மைதான வேலைத்திட்டத்தினை பிரதேச செயலர் ஆ.லதுமீரா அவர்கள் அடிக்கல்லை நாட்டி வைபவரீதியாக ஆரம்பித்து வைத்தார்.
இந் நிகழ்வில் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர், பிரதேச உதவிப் பிரதேச செயலர், பிரதேச சபை தவிசாளர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், விளையாட்டு பிரிவு உத்தியோகத்தர், கிராம சேவகர், விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.