இ.போ.சபையினர் புதிய பஸ் நிலையத்தில் தனியாருடன் இணைந்து சேவையில் ஈடுபடப்போவதில்லை.
புதிய நெடுந்தூர பேருந்து நிலையத்துக்கு செல்வதில்லை என இ.போ.ச முடிவு.
யாழ்ப்பாணத்தில் புதிதாக அமைக்கப்பட்ட நெடுந்தூர பேருந்த நிலையத்தில் இ.போ.ச. பேருந்துகளை தரித்து சேவையில் ஈடுபடுவது தொடர்பில் நேற்றைய தினம் 6 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து முக்கிய தீர்மானத்தை எடுத்துள்ளதாக அறியமுடிகிறது.
இதில் தாம் தற்போது சேவையில் ஈடுபடும் பிரதான பஸ் நிலையத்தை எப்போதும் மாற்றப்போவதில்லை எனவும் புதிய பஸ் நிலையத்தில் தனியாருடன் இணைந்து சேவையில் ஈடுபடப்போவதில்லை எனவும் 6 தொழிற்சங்கங்களும் தீர்மானித்துள்ளதாக அறியமுடிகின்றது.
இவ்வாறு இ.போ.ச. பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்துக்கு செல்லமறுப்பதால் தனியார் பேருந்துகளும் அங்கு செல்லும் என்பது சந்தேகமே?