யாழில் பெண்ணொருவர் உள்ளிட்ட மேலும் ஐவர் கொரோனாவால் சாவு.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் உள்ளிட்ட மேலும் ஐவர் உயிரிழந்துள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.
மூன்று பெண்களும், இரு ஆண்களுமே இறுதியாக உயிரிழந்துள்ளனர். இதன்படி நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 532 ஆக அதிகரித்துள்ளது.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 86 வயதான பெண் ஒருவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்றுமுன்தினம் சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.
கம்பஹா பகுதியைச் சேர்ந்த 76 வயதான பெண் ஒருவர், கொழும்பு தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்றுமுன்தினம் சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.
கொழும்பு, கொச்சிக்கடைப் பகுதியைச் சேர்ந்த 61 வயதான ஆண் ஒருவர், கொழும்பு வடக்கு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 8ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
பமுனுகம பகுதியைச் சேர்ந்த 78 வயதான ஆண் ஒருவர், அவரது வீட்டில் கடந்த 10ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
களுத்துறைப் பகுதியைச் சேர்ந்த 94 வயதான பெண் ஒருவர், ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார்.