வடக்கு சுகாதாரத் தொண்டர்கள் கோட்டாவைச் சந்திக்க ஏற்பாடு.மஹிந்தானந்த வாக்குறுதி.
யாழ்ப்பாணத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைச் சந்திப்பதற்குத் தான் ஏற்பாடு செய்து தருவதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே உறுதி வழங்கியுள்ளார்.
வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர்கள் 17 ஆவது நாளாகவும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு திரும்பும்போது, அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே சுகாதாரத் தொண்டர்களைச் சந்தித்தார்.
இதன்போது, சுகாதாரத் தொண்டர்கள் தமது பிரச்சினைகளை அமைச்சரிடம் எடுத்துக் கூறினர்.
குறித்த கலந்துரையாடலின்போது, சுகாதாரத் தொண்டர்களின் பிரச்சினைகளை ஜனாதிபதியிடம் கலந்துரையாட ஏற்பாடு செய்வதாக அமைச்சர் வாக்குறுதி வழங்கினார்.