உங்க மனதை ரிலாக்ஸ் செய்யவும் அமைதிபடுத்தவும் உடற்பயிற்சி என்பது அவசியம்.
இதுவரை உடற்பயிற்சி என்பது உடலுக்கு மட்டும் நல்லது என்று கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஆனால் உடற்பயிற்சி என்பது நம் மனதுக்கும் நல்லது. இது மனதிற்கு ரிலாக்ஸ்யை தரும். மன அழுத்தத்தை குறைக்கும். இந்த நவீன காலத்தில் உங்களுக்கு ஏற்படும் வேலை மன அழுத்தமாக இருக்கட்டும் சரி குடும்ப மன அழுத்தமாக இருக்கட்டும் சரி என அனைத்து விஷயங்களிலும் உடற்பயிற்சி முக்கிய பங்கு வகிக்கிறது. மன அழுத்தம் என்பது எல்லா வயதினரை தாக்க கூடியது. காலப்போக்கில் இது உங்க ஆரோக்கியத்தை பாதிக்கும் நாள்பட்ட நோய்களுக்கு வழி வகுக்கும். மன அழுத்தத்தால் உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் நீரிழிவு நோய் போன்ற பிரச்ச்சினைகள் ஏற்படலாம்.
உங்க மனதை ரிலாக்ஸ் செய்யவும் அமைதிபடுத்தவும் உடற்பயிற்சி என்பது அவசியம்
நீட்டிப்பு உடற்பயிற்சி உடலில் இருந்து பதற்றத்தை வெளியேற்ற நீட்டிப்பு உடற்பயிற்சி என்பது அவசியம். உட்கார்ந்த இடத்திலேயே வேலை செய்பவர்களுக்கும், நிறைய வாகனம் ஓட்டுபவர்களுக்கும் இது மிகவும் நல்லது. இது உங்க மூட்டுகள் மற்றும் தசைகளில் வீக்கத்தை குறைக்க உதவுகிறது. மனதை அமைதிபடுத்தவும் நிதானப்படுத்தவும் உதவுகிறது. எனவே நீங்கள் தினமும் காலையில் படுக்கையில் இருந்து எழுந்திருக்கும் போதே உடலை நீட்டி தெளித்து விடலாம். இந்த காலை நேர நீட்டிப்புகள் உங்களை உற்சாகப்படுத்தவும், படுக்கை நேர நீட்டிப்புகள் இரவில் நீங்கள் நன்றாக தூங்கவும் உதவுகிறது.
இது உங்க மன அழுத்தத்தை போக்கும் ஒரு ஸ்ட்ரஸ் பஸ்டர் என்றே கூறலாம். நீங்கள் மன அழுத்தத்தில் இருக்கும் போதெல்லாம் ஜாக்கிங் செய்யுங்கள். இதன் மூலம் நீங்கள் புத்துணர்ச்சி உடனும் ஆற்றலுடனும் இருப்பீர்கள். இது எண்டோர்பின்களின் உற்பத்தியைத் தூண்டுகிறது மற்றும் உங்களை தளர்த்தவும் உதவுகிறது.