துருக்கி நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.
துருக்கி நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் அங்கு புதிய வகை உருமாறிய கொரோனா பரவி வருவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் தற்போதைய நிலவரப்படி துருக்கியில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்தைக் கடந்துள்ளது.
இது குறித்து துருக்கி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், அங்கு கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 20,428 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூல துருக்கியில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30,13,122 ஆக அதிகரித்துள்ளது.
துருக்கியில் கடந்த 24 மணி நேரத்தில் 102 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 30,061 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக துருக்கியில் தினசரி கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 100-க்கு கீழ் பதிவாகி வந்தது குறிப்பிடத்தக்கது.