தடுப்பூசி ஏற்றுமதியை நிறுத்தியது இந்தியா!
தடுப்பூசி ஏற்றுமதியை
நிறுத்தியது இந்தியா!
இலங்கைக்குப் பாதிப்பா?
இராஜாங்க அமைச்சர் விளக்கம்
இந்தியாவில் கொரோனாத் தடுப்பூசி ஏற்றுமதி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள போதிலும் முன்பதிவு செய்யப்பட்டுள்ள தடுப்பூசிகள் தாமதமின்றி இலங்கையை வந்து சேரும் என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
உள்நாட்டில் தடுப்பூசிக்கான தேவை அதிகரித்துள்ளதால், ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனகா தடுப்பூசிகளை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் பணிகளை எதிர்வரும் ஏப்ரல் இறுதி வரை இந்தியா தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.
இந்தநிலையில், இலங்கைக்கு தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளவதில் சிக்கல் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், இலங்கைக்குத் தடுப்பூசிகள் பெற்றுக்கொடுக்கப்படும் என இந்தியா உறுதியளித்துள்ளது என சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
அதன்படி, இலங்கையால் எதிர்வரும் இரண்டு மாதங்களுக்காக முன்பதிவு செய்யப்பட்டுள்ள 10 இலட்சம் தடுப்பூசிகள் தாமதமின்றி இலங்கையை வந்து சேரும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.