இன -மத அடிப்படையிலான அரசியல் கட்சிகளின் பதிவுகளுக்கு தடை
இன அல்லது மத அடிப்படையில் பெயரிடப்பட்ட அரசியல் கட்சிகளின் பதிவுகளை ரத்து செய்ய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
23 ஆம் தேதி நடந்த தேர்தல் ஆணையத்தின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது பதிவுசெய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் உத்தியோகபூர்வ பெயர்கள் அத்தகைய மத அல்லது இன என பெயரிடப்பட்டிருந்தால், அவை எதிர்காலத்தில் திருத்தப்பட வேண்டும், அதேபோல் அந்த கட்சிகளின் அரசியலமைப்பில் அத்தகைய உட்பிரிவுகள் இருந்தால் அவற்றை திருத்தம் செய்ய கால அவகாசம் வழங்கப்படும் என தேர்தல் ஆணையக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு அறிவிக்கப்பட வேண்டும் எனவும் , அவற்றைத் திருத்துவதற்கு நியாயமான கால அவகாசம் வழங்கப்பட உள்ளதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.