யாழ் மாநகர முதல்வர் தற்போது யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வரப்படுவதாக தகவல்.
யாழ்ப்பாணம் பொலிஸ்நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு வவுனியா கொண்டு செல்லப்பட்ட யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தற்போது யாழ்ப்பாணத்துக்கு அழைத்துவரப்படுவதாக தெரியவந்துள்ளது.
யாழ்ப்பாணம் நீதிமன்றில் முற்படுத்தப்படுவதற்காக அவர் அழைத்துவரப்படுவதாக தெரியவருகிறது.
இதன் போது அவருக்கு பிணைவழங்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
மணிவண்ணன் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான சட்டத்தரணிகள் முன்னிலையாகி மணிவண்ணனுக்கான பிணைமனுவினைக் கோருவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாகவும் தெரியவருகிறது.