ஒரு கிலோ கோழி இறைச்சிக்கான அதிகப்பட்ச சில்லறை விலை நிர்ணயம்.
கோழி இறைச்சிக்கான அதிகப்பட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டது!!
ஒரு கிலோ கோழி இறைச்சிக்கான அதிகப்பட்ச சில்லறை விலையை 600 ரூபாவாக நிர்ணயிப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.
கூட்டுறவு, விற்பனை அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சில் கோழி விற்பனையாளர்களுடன் (10) இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
கூட்டுறவு, விற்பனை அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தலைமையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இதில் கோழி இறைச்சி உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் கலந்துக்கொண்டனர்.
சந்தையில் கோழி இறைச்சியின் விலை அதிகரித்ததை அடுத்து புறக்கோட்டை கோழி இறைச்சி விற்பனையாளர்கள் விற்பனை நடவடிக்கையில் இருந்து விலகுவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தனர்.
கலந்துரையாடலின் நிறைவில் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன, புரயிலர் கோழி இறைச்சி ஒரு கிலோ 430 ரூபாவுக்கு விற்பனை செய்ய குறித்த சங்கங்கள் தீர்மானித்தன.
இதில் இடைத்தரகர்களுக்கு காணப்பட்ட பிரச்சினையும் தீர்க்கப்பட்டுள்ளது. இடைப்பட்டவர்களுக்கு 375 ரூபாவுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டது. இறுதியாக ஒரு கிலோ கோழி இறைச்சிக்கான அதிகப்பட்ச சில்லறை விலையாக 600 ரூபாவை நிர்ணயிப்பதற்கு இணக்கம் காணப்பட்டது.´ என்றார்.