மில்லர் கிறிஸ்,மோரிஸ் அதிரடியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி அபார வெற்றி.
ஐபிஎல் தொடரின் 7-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்பிடி, டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. முன்னணி வீரர்களான பிரித்வி ஷா (2), ஷிகர் தவான் (9), ரகானே (8) ஆகியோரை இடது கை வேகப்பந்து வீச்சாளர் உனத்கட் அடுத்தடுத்து வெளியேற்றினார்.
அடுத்து மார்கஸ் ஸ்டாய்னிஸை டக்அவுட்டில் வெளியேற்றினார் முஷ்டாபிஜூர் ரஹ்மான் வெளியேற்றினார். இதனால் டெல்லி அணி 37 ரன்கள் எடுப்பதற்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்து திணறியது.
கேப்டன் ரிஷப் பண்ட் ஒருபக்கம் நிலைத்து நின்று சிறப்பாக விளையாடி 32 பந்தில் 9 பவுண்டரியுடன் 51 ரன்கள் எடுத்து ரன்அவுட் ஆனார்.
லலித் யாதவ் 20 ரன்களும், டாம் கர்ரன் 21 ரன்களும், கிறிஸ் வோக்ஸ் ஆட்டமிழக்காமல் 15 ரன்களும் அடிக்க டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்தது.
ராஜஸ்தான் அணி சார்பில் உனத்கட் 3 விக்கெட்டும், முஷ்டாபிஜூர் ரஹ்மான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோஸ் பட்லர், மனன் வோரா இறங்கினர். டெல்லி பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி அசத்தினர். இதனால் பட்லர் பட்லர் 2, வோரா 9, சஞ்சு சாம்சன் 4, ஷிவம் டூபே 2, ரியான் பராக் 2 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
ராஜஸ்தான் அணி ஒரு கட்டத்தில் 42 ரன்கள் எடுப்பதற்குள் 5 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் டேவிட் மில்லர் அரை சதமடித்து 47 பந்தில் 62 ரன் அடித்து அவுட்டானார்.
அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த ராகுல் திவாட்டியா 19 ரன்னில் வெளியேறினார். கடைசியில் கிறிஸ் மோரிசும், உனத்கட்டும் போராடினர். இருவரும் கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர்.
கடைசி ஓவரில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற 12 ரன்கள் தேவைப்பட்டது. கிறிஸ் மோரிஸ் 2 சிக்சருடன் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். மோரிஸ் 18 பந்தில் 4 சிக்சர்களுடன் 36 ரன்களுடனும், உனத்கட் 11 ரன்னுடனும் அவுட்டாகாமல் இருந்தனர். இதன்மூலம் 3 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
டெல்லி அணி சார்பில் ஆவேஷ் கான் 3 விக்கெட்டும், கிறிஸ் வோக்ஸ், ரபாடா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.