பாரிய கல்லொன்று உருண்டு வந்து மாணவன் மீது மோதியதில் படுகாயம்.
பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டின்சின் பிரதேச சபைக்கு அருகாமையில் இன்று மதியம் பாரிய கல்லொன்று உருண்டுவந்து மாணவன்மீது மோதியதில் அம்மாணவன் படுகாயமடைந்துள்ளார்.அவர் சிகிச்சைக்காக கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
டின்சின் தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த தனது தாய்க்கு உதவிக்காக சென்ற மாணவனே விபத்தில் படுகாயமடைந்துள்ளார்.
நோர்வூட் – பொகவந்தலா வீதியை காபட் பாதையாக அபிவிருத்தி செய்வதற்காக வீதியினை அகலப்படுத்தும் பணி தற்போது இடம்பெற்றுவருகின்றது. ஜேசிபி இயந்திரம்மூலம் மண்ணை வெட்டி அகற்றும் போதே பாரிய கல் உருண்டு வந்துள்ளது.
முதல் கல்லினை சாரதி தடுத்து நிறுத்தியுள்ளதாகவும் இரண்டாவதாக உருண்டு வந்த கல்லினை தடுப்பதற்கு முன் கல் உருண்டோடியதாகவும் சம்பவத்தினை நேரில் கண்டோர் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக ஜேசிபி யின் சாரதி பொகவந்தலாவை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.