இலங்கை உட்பட மூன்று நாடுகளுடனான நேரடி விமானப் போக்குவரத்தை தடைசெய்தது குவைத்.
இலங்கை உட்பட மூன்று நாடுகளுடனான நேரடி விமானப் போக்குவரத்தைக் குவைத் தடை செய்துள்ளது.
தெற்காசிய நாடுகளில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதைத் தொடர்ந்து, இலங்கை, பாகிஸ்தான், நேபாளம் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுடனான நேரடி விமானப் போக்குவரத்தைத் தடை செய்வதாக குவைத் இன்று அறிவித்துள்ளது.
மேற்படி நான்கு நாடுகளையும் சேர்ந்த பயணிகள் மூன்றாவது நாடொன்றில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலை நிறைவுசெய்துகொண்டு, குவைத்துக்குள் வர அனுமதி வழங்கப்படும் என்று அந்நாட்டு சிவில் விமானப் போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இலங்கை, பாகிஸ்தான், நேபாளம் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் பயணிகளுக்கான தடை, மறு அறிவித்தல் வரும் வரை தொடரும் என்றும் குவைத் சிவில் விமானப் போக்குவரத்துத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.