இருவகை கோவிட் தடுப்பூசியை கலந்து பயன்படுத்த WHO பரிந்துரை செய்யவில்லை! – சுதர்ஷனி
இருவகை கோவிட் தடுப்பூசிகளை கலந்து பயன்படுத்த உலக சுகாதார நிறுவனம் எந்த அனுமதியும் கொடுக்கவில்லை என இராசாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவத்துள்ளார். எந்த தடுப்பூசி கொடுக்கப்பட்டதோ அந்த தடுப்பூசியின் இரண்டாவது டோஸை கொடுக்க வேண்டும் என்றார் அவர்.
இன்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சியைப் பொறுத்து எதிர்காலத்தில் பரிந்துரைகள் மாறக்கூடும் என்று கூறினார்.
முதல் டோஸைப் போலவே அதே தடுப்பூசியின் இரண்டாவது டோஸையும் கொடுக்க உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது என்று அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.