இஸ்ரேல்- ஹமாஸ் மோதலை முடிவுக்கு கொண்டு வர ஐ.நா தலையீடு வேண்டும்.
இஸ்ரேல்- ஹமாஸ் இயக்கத்தினர் இடையேயான மோதலை விரைவாக முடிவுக்கு கொண்டு வர ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை தலையிட வேண்டும் என சீனா வலியுறுத்தியுள்ளது.
பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகள் மற்றும் இஸ்ரேல் ராணுவம் இடையிலான மோதல் தொடர்ந்த வண்ணமே உள்ளது.
காசா முனை பகுதியில் உள்ள ஹமாஸ் போராளிகளை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் வான்தாக்குதல் நடத்துவதும், அதற்கு பதிலடியாக ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை வீசுவதுமாக மோதல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இந்த மோதலை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று பல உலக நாடுகளும் முயற்சித்து வருகின்றன
இந்நிலையில், இஸ்ரேல்- ஹமாஸ் இயக்கத்தினர் இடையேயான மோதலை விரைவாக முடிவுக்கு கொண்டு வர ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை தலையிட வேண்டும் என சீனா வலியுறுத்தியுள்ளது.
சர்வதேச நீதிக்கு எதிரான பக்கத்தில் அமெரிக்கா நிற்பதால் இந்த விவகாரத்தில் ஐநா பாதுகாப்பு சபை இதுவரை நடவடிக்கை எடுக்காமல் உள்ளது என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகம்மது குரோஷியிடம் கூறியதாக சீன அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் இரு தரப்பு தீர்வுக்கு சீனா ஆதரவு அளிப்பதாகவும் இதை ஐ.நா பாதுகாப்பு சபை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.