கப்பல் தீ விபத்தால் சுற்றாடல் தாக்கத்தை ஆராய நடவடிக்கை.

கொழும்புத் துறைமுகத்துக்கு அருகில் இடம்பெற்ற கப்பல் தீ விபத்தின் மூலம் சுற்றாடலுக்கு ஏற்படும் தாக்கங்களை ஆராய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த தீ விபத்தால் சுற்றாடலுக்கு ஏற்படும் தாக்கங்களை ஆராய்வதற்கான குழுவினரை சம்பவ இடத்துக்கு அனுப்பி வைத்துள்ளதாக கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்தியாவின் குஜராத்தில் இருந்து வந்து, கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் நங்கூரமிடப்பட்டிருந்த ‘எம்வி- எக்ஸ்பிரஸ் பேர்ல்’ கப்பலில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
கப்பலில் ஏற்பட்ட தீப்பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இலங்கைக் கடற்படையினரும் விமானப்படையினரும் ஈடுபட்டனர்.
சிங்கப்பூருக்குச் சொந்தமான இந்தக் கப்பலில் இரசாயனப் பொருட்கள் கொண்டுவரப்பட்டிருந்தன. இரசாயனக் கசிவு காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டது என ஆரம்பகட்ட பரிசோதனைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.