சட்டமா அதிபர் திணைக்களத்தில் தமிழ்மொழி புறக்கணிப்புக்கு எதிராகக் கடும் கண்டனங்கள்.செந்தில் தொண்டமான்.

நீதி அமைச்சரை நேரில் சந்தித்தார் செந்தில் தொண்டமான்
சட்டமா அதிபர் அலுவலகத்தில் சீன அரசின் நிதியுதவியுடன் புதிதாகத் திறந்து வைக்கப்பட்டுள்ள மின் நூலகத்தின் பெயர்ப்பலகையில் இலங்கையின் உத்தியோகபூர்வ மொழியான தமிழ் மொழியை சீன அதிகாரிகள் புறக்கணித்தமைக்கு எதிராகக் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
இலங்கையின் சட்டத்தைப் பாதுகாக்கும் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தலைமை சட்ட அலுவலகத்திலேயே தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டால் தமிழ் மொழிக்கு இலங்கையில் உள்ள அங்கீகாரம் என்னவென்றே கேள்வி எழுகின்றது என அந்தக் கண்டனங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அறிந்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும் பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான், உடனடியாக நீதி அமைச்சர் அலி சப்ரியைத் தொடர்பு கொண்டு, இதற்கான உடனடி நடவடிக்கையை எடுத்து தமிழ் மொழி புறக்கணிப்பை நிவர்த்தி செய்யுமாறு வேண்டுகோள்
விடுத்துள்ளார்.
உடனடியாக இந்த விடயத்தில் நடவடிக்கை எடுப்பதாக நீதி அமைச்சர் செந்தில் தொண்டமானிடம் உறுதியளித்துள்ளார்.