கிளிநொச்சி பளை தம்பகாமம் பகுதியில் குளத்தில் பெண் ஒருவரின் சடலம் மீட்கபட்டுள்ளது.

குறித்த பெண் நேற்று முதல் காணாமல் போயிருந்த நிலையில் தேடப்பட்டு வந்தார்.
தம்பகாமம் குளக்கரையில் சடலம் இவ்வாறு இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.சடலமாக மீட்கப்பட்டவர் அதே பகுதியை சேர்ந்த 41 வயதுடைய பொன்னையா வனயா என அடையாளம் காணப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை காவற்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.