தென்மராட்சியில் திடீரென உயிரிழந்த வயோதிபருக்கும் கொரோனா!
யாழ்., தென்மராட்சியில் இன்று திடீரென உயிரிழந்த வயோதிபர் ஒருவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.
சாவகச்சேரி, மீசாலைப் பகுதியைச் சேர்ந்த 68 வயதான வயோதிபர் இன்று திடீரென நோய்வாய்ப்பட்ட நிலையில் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
அதையடுத்து உயிரிழந்தவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையின்போது அவருக்குக் கொரோனாத் தொற்று உறுதியாகியுள்ளது.
இதேவேளை, சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் அவரது மகள் கொரோனாத் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றார் எனத் தெரியவந்துள்ளது.