நயினாதீவு அம்மன் பிரதம குருக்கள் கொரோனா தொற்றாலே உயிரிழப்பு.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி யாழ்ப்பாணத்தில் மற்றுமொரு பிரபலமான இந்துமதக் குருக்கள் உயிரிழந்துள்ளார்.
நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயம் மற்றும் சுதுமலை புவனேஸ்வரி அம்மன் ஆலயம் ஆகியவற்றின் பிரதம குருக்களும் சர்வதேச இந்துமத குருபீடாதிபதியுமான சிவஸ்ரீ சம்பு மஹேஸ்வரக் குருக்கள் இன்று அதிகாலை உயிரிழந்திருந்தார்.
அவரின் மரணம் தொடர்பில் யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் அவருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் இணுவில் கந்தசுவாமி கோயிலின் பிரதம குருக்களும் கொரோனாத் தொற்றால் உயிரிழந்திருந்தமை தெரிந்ததே.