சேலத்தில் கருப்பு பூஞ்சை பாதிப்பும் அதிகரிக்கிறது: மக்களே உஷார்!
சேலம் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய்த் தொற்று 56 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாகச் சுகாதார பணிகள் துணை இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்.
கருப்பு பூஞ்சை நோய் குறித்து சேலம் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சுப்பிரமணியம் கூறுகையில், “கடந்த 17ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை சேலம் மாவட்டத்தில் 48 பேருக்குக் கருப்பு பூஞ்சை நோய்ப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு
அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இவர்கள் அனைவருக்கும் சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 37 பேரும் பிற மாவட்டங்களில் 11 பேர் அடங்குவர்.
அதே போல் தனியார் மருத்துவமனைகளில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 8 பேருக்கும் பிற மாவட்டங்களுக்கு அந்த 6 பேருக்கும் கருப்பு பூஞ்சை நோய் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்றார்.