ஐக்கிய மக்கள் சக்திக்கு மூன்று ஆசனங்கள் நிச்சயம் கிடைக்கும் : கணேஸ்வரன் வேலாயுதம்
ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணத்தில் மூன்று உறுப்பினர்களை நாங்கள் நிச்சயமாக பெற்றுக் கொள்வோம். அதே வேளையில் நான் வெற்றி பெறும் பட்சத்தில் நிச்சயமாக பாராளுமன்ற சம்பளத்தினை பெறப்போவதுமில்லை சொகுசு வாகனப் பெமிட்டயும் எடுக்கப் போவதுமில்லை. அப்பணத்தினை பெற்று பொதுமக்களுக்கு செலவு செய்யப் போகின்றேன் என உறுதியுடன் தெரிவித்து கொள்கின்றேன் என்று யாழ் மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் முதன்மை வேட்பாளர் கணேஸ்வரன் வேலாயுதம் தெரிவித்துள்ளார்.
யாழ் கிளிநொச்சி தேர்தல் தொகுதிக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசார கிளைக்காரியாலயத்தினை திறந்து வைத்து உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் கலந்து கொண்ட யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளர் கணேஸ்வரன் வேலாயுதம் அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றும் போது
நாங்கள் மக்களுக்கு சொந்த செலவில் சேவை செய்து விட்டு வந்து தான் தேர்தலில் நிற்கின்றோம். ஆனால் மக்களுடைய வாக்குகளை எடுத்துச் சென்று சகல வரப்பிரசாதங்களையும் அனுபவித்து கொண்டு மக்களுக்கு எவையுமே செய்யாதவர்களுக்கு வாக்குகள் வழங்குவதில் எந்தப் பிரயோசனமும் இல்லை. ஏமாற்றி வாக்குகளை பெற்றுக்கொள்ளும் வேட்பாளர்களுக் கு நீங்கள் இம்முறை ஏமாந்து வாக்குகள் அளிக்க வேண்டாம்
நீங்க ள் ஒவ்வொரு தேர்தல்களிலும் பிழையானவர்களையும் தகுதியில்லாதவர்களையும் தான் தெரிவ செய்து கொண்டு இருக்கிறீர்கள். இந்த தவறை தொடர்ந்து செய்யாதீர்கள்.
நான் இம்முறை பாராளுமன்றம் சென்றேன் எனின் அ டுத்தமுறை வந்து உங்களிடம் வாக்கு கேட்க மாட்டேன். ஏனென்றால் என்னுடைய ஐந்து வருட காலத்தில் என்னால் பெரும்பணிகள் முடிக்கப்பட்டிருக்கும். சமூக நலன் சார்ந்த விடயங்களில் அதிக கவனம் செலுத்தினால் மக்கள் எப்போதும் தன் பின்னாலேயே நிற்பார்கள். தேர்தல் வரும் மேடைகளில் ஏறாமல் வீட்டில் இருந்தவாறு பதவியை பெற்றுக்கொள்வென். யாழ் மக்கள் அவ்வளவு நன்றி மறந்த மக்கள் அல்லர்.நான் தனிப்பட்ட ரீதியில் செய்த சமூக நலன் சார்ந்த சேவைக்காக மக்களிடமிருந்து கிடைத்த வரும் ஆதரவு எனது வெற்றியை உறுதி செய்கின்ற து .அவர்கள் நன்றி மறவாத மக்கள் எதிர்வரும் பொதுத்தேர்தலில் நான் வீடு வீடாக சென்று வாக்கு கேட்க வேண்டியதில்லை. வீட்டில் இருந்தவாறே வெற்றியை உறுதி செய்வேன்.
ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொண்டிருந்த இனவாத கட்சிகள் எல்லாம் வெளியேறிவிட்டதாகவும் சஜித் அணியில் தான் இனவாத கட்சிகள் உள்ளன என்றும் கூறுகிறார்கள். உண்மயியே இன்னும் அந்தப்பக்கம் தான் ரஞ்சன் ராமநாயக்க தயாகமகே போன்ற இனவாத கருத்துக்களை உடையவர்கள் இருக்கிறார்கள்.
தமிழ்கூட்டமைப்பு அரசியல் தீர்வை பெற்றுத்தருவோம் என்று பல சாக்கு போக்குகளை சொல்லி மக்களை தொடர்ந்து ஏமாற்றி வருகிறார்கள். ரணில் தர விரும்பும் போது மைத்திரி விடவில்லை என்றெல்லாம் கூறி இன்று மக்களை மடையர்களாக ஆக்கி வைத்துள்ளார்கள்.
காலம் காலமாக உங்கள் கைவிரல்களால் உங்கள் கண்களை குத்திக்கொள்ளாமல் நியாயமாக சிந்தித்து மக்களுக்கு சேவை செய்யக்கூடிய வேட்பாளர்களை நாடாளுமன்றம் அனுப்ப வேண்டிய தேவை இருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.
Comments are closed.