பௌத்தத்திற்கே முன்னுரிமை – பிரதமர்
பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கி ஏனைய மதங்களின் உரிமைகளும் பாதுகாக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மொறட்டுவை – லுனாவை பகுதியில் இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர்,
“அனைத்து இன மக்களும் சுதந்திரமாகவும் தத்தமது கலாசாரங்களை முழுமையாக பின்பற்றவும் முழு சுதந்திரம் உள்ளது. ஒற்றையாட்சியில் நாட்டுக்குள் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கி ஏனைய மதங்களின் உரிமைகளை பாதுகாத்து அனைத்து இன மக்களும் ஒற்றுமையுடன் வாழும் சூழ்நிலை மீண்டும் உறுதிப்படுத்தப்படும்.
எமது ஆட்சியில் விகாரை, கோயில், பள்ளிவாசல் மற்றும் தேவாலயம் ஆகியவை மறுசீரமைக்கப்பட்டன. அபிவிருத்தி பணிகளின்போது இனங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. நாட்டுக்கே அபிவிருத்தி பணிகள் ஒருமித்த விதத்தில் முன்னெடுக்கப்பட்டன. வடக்கு, தெற்கு என வேறுப்படுத்தி பார்க்கவில்லை” என மேலும் தெரிவித்துள்ளார்.
Comments are closed.