ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச்சென்ற பேரூந்திற்கு கல்வீச்சு.
வவுனியா சிதம்பரபுரம் பகுதியிலிருந்து வவுனியா இராசேந்திரகுளம் ஆடைத்தொழிற்சாலை நோக்கி ஊழியர்களை ஏற்றிச்சென்ற பேரூந்திற்கு முருகனூர் விவசாய பண்ணைக் அருகே முகங்களை மறைந்தவாறு நின்ற இளைஞர் குழுவினர் கல் வீச்சு தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
கல்வீச்சு தாக்குதலையடுத்து பேரூந்தினை சாரதி நிறுத்திய போது பேரூந்தினுள் புகுந்த அவ் இளைஞர் குழுவினர் சாரதி மீதும் தாக்குதல் மேற்கொண்டு அவ்விடத்திலிருந்து தப்பித்துச் சென்றுள்ளனர்.
குறித்த பேருந்தின் அனைத்து கண்ணாடிகளும் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் சாரதி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஊழியர்கள் எவரும் பெருதளவிலான காயங்கள் எவையும் ஏற்படவில்லை.