தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 30 ஆயிரம் பேர் கைது!

நாட்டில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய மேலும் 1,027 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் பேச்சாளரான பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார் .
அத்துடன், தனிமைப்படுத்தல் சட்டம் நடைமுறைக்கு வந்த கடந்த ஒக்டோபர் மாதம் முதல் இதுவரை 30 ஆயிரத்து 42 பேர் அந்தச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின்கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் மேலும் கூறினார்.