மாஸ்க் அணிந்த கொரோனா மாதா – தொற்றிலிருந்து காப்பாற்ற வேண்டி பிரார்த்திக்கும் கிராமவாசிகள்!

கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை நாடு முழுவதும் இன்னும் பரவி கொண்டே தான் இருக்கிறது. வீரியமிக்க தொற்றின் இரண்டாம் அலையில் சிக்கி நாடு தத்தளித்து வருகிறது. பாதிப்புகள் அதிகமாக உள்ள பல மாநிலங்களில் உத்திரப்பிரதேசமும் ஒன்று. எனவே அம்மாநிலத்தில் இருந்து கொரோனா தொற்றை விரட்ட சிலர் யாகங்களை செய்து வருகின்றனர். சிலர் கங்கா ஜி வழிபாட்டை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தில் அமைந்துள்ளது சுக்லாப்பூர் கிராமம். இங்குள்ள மக்கள் கொடிய கோவிட்-19 வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பை பெற, தங்களை காக்குமாறு ‘கொரோனா மாதா’ (Corona Mata) கோயில் ஒன்றை அமைத்து உள்ளனர். மேலும் கொரோனா வைரஸை கொரோனா மாதா கோவிலில் தடுக்க பிரார்த்தனை செய்ய தொடங்கியுள்ளனர்.

உள்ளூர் மக்களுக்கான இந்த கொரோனா மாதா கோயில் அமைக்க கிராமவாசிகள் முதலில் நன்கொடை சேகரித்துள்ளனர். பின்னர் கிராமவாசிகள் அடங்கிய குழு இந்த கோயிலை கட்டி உள்ளது. கோவிட் -19 தொற்றின் நிழல் ஒருபோதும் சுக்லாப்பூர் மற்றும் அருகிலுள்ள கிராமங்களின் மீது விழ கூடாது” என்று கிராம மக்கள் கொரோனா மாதாவிடம் பிரார்த்தனை செய்ய தொடங்கியுள்ளனர். பலர் ஒன்று கூடி இந்த கொரோனா மாதா கோயிலில் பிரார்த்தனையில் ஈடுபட்டாலும், கோவிட் -19 5தொற்றுக்கு எதிரான நெறிமுறையின் முக்கியத்துவத்தையும் அவர்கள் வெளிப்படுத்தாமல் இல்லை.

கோயிலில் உள்ள கிராமவாசிகள் மாஸ்க் அணிவது, சமூக தூரத்தை பராமரிப்பது போன்ற கோவிட் வழிகாட்டுதல்களை பின்பற்றும்படி மக்களை கேட்டுக் கொண்டுள்ளார். இவர்களின் வேண்டுகளின் படி கோயிலில் பிரார்த்தனை செய்யும் போது முக கவசத்தை முறையாக பயன்படுத்துதல் மற்றும் சமூக இடைவெளியுடன் நிற்பது உள்ளிட்ட பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்களும் தவறாமல் பின்பற்றி வருகின்றனர். அதோடு திறந்த கோவிலில் ‘கொரோனா மாதா’ என்ற வெள்ளை நிறத்திலான சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலைக்கும் கூட மாஸ்க் அணிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா மாதா சிலைக்கு தண்ணீர், பழங்கள் மற்றும் இனிப்புகள் போன்றவை வழங்கப்படுகின்றன. இந்த கோயில் அமைக்கப்பட்டிருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள கிராமவாசி ஒருவர், லட்சக்கணக்கான உயிர்களைப் பறித்து வரும் கொடிய கொரோனாவிலிருந்து பாதுகாப்பாக இருக்க, தெய்வத்தை வழிபடுவது மிகப்பெரிய நிவாரணம் அளிக்கும் என்ற நம்பிக்கையுடன் ஒரு வேப்ப மரத்தின் கீழ் இந்த ‘கொரோனா மாதா’ கோயிலை அமைக்க முடிவு செய்தோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

கிராமவாசிகள் இப்போது கோவிலில் தினசரி பிரார்த்தனை நடத்தி, மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க கொரோனா மாதாவின் ஆசீர்வாதத்தை வேண்டுகின்றனர். மேலும் கொரோனா மாதாவின் வழிபாட்டால் கிராமத்தில் வைரஸ் தொற்று ஏற்படாது என்று நம்புவதாக மக்கள் கூறுகின்றனர். இதனிடையே கொரோனா மாதா கோயிலில் மக்கள் பிரார்த்தனை செய்யும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. ஆனால் சங்கிப்பூர் ஸ்டேஷன் ஹவுஸ் ஆபிஸர் (SHO), கிராமத்தில் இது போன்ற ஒரு கோயில் அமைத்துள்ளது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று கூறி உள்ளார்.

 

Leave A Reply

Your email address will not be published.