கொரோனா 2வது அலைக்கு 719 மருத்துவர்கள் பலி – தமிழகத்தில் எத்தனை பேர்?

இந்தியாவில், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையில் சிக்கி, இதுவரை, 719 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக ஐ.எம்.ஏ., எனப்படும் இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி விட்டு, தற்போது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. தினசரி 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது, 84 ஆயிரம் என பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது.

கொரோனா வைரஸ் தொற்றால், மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் என அனைத்துத் தரப்பு மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கொரோனா இரண்டாவது அலைக்கு, நாடு முழுவதும் இதுவரை, 719 மருத்துவர்கள் பலியாகி உள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்திய மருத்துவ சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இந்தியாவில், கொரோனா இரண்டாவது அலைக்கு இதுவரை, 719 மருத்துவர்கள் பலியாகி உள்ளனர். அதிகபட்சமாக, பீகார் மாநிலத்தில், 111, தலைநகர் டெல்லியில் 109, உத்தர பிரதேச மாநிலத்தில், 79, மேற்கு வங்க மாநிலத்தில், 63, ராஜஸ்தான் மாநிலத்தில் 43 மருத்துவர்கள் பலியாகி உள்ளனர்.

தமிழகத்தில், 32 மருத்துவர்களும், புதுச்சேரியில் ஒரு மருத்துவரும் கொரோனா இரண்டாவது அலைக்கு உயிரிழந்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.