கொரோனா தொற்றினால் வருமானம் இழந்த 1500 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள்.
குருநாகல் தெலியாகொன்ன பிரதேசத்தில் கொரோனா தொற்றினால் வருமானம் இழந்த 1500 குடும்பங்களுக்கு தலா 3000 ரூபா பெறுமதியான உலருணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
தெலியாகொன்ன ஜும்ஆப் பள்ளி நிர்வாகம், தெலியாகொன்ன ஸகாத் அமைப்பு, மற்றும் செல்வந்தர்களின் பங்களிப்புடன் தெளிகொன்ன பிரதேசத்தில் கொரோனா தொற்றினால் வருமானம் இழந்த சகல குடும்பங்களுக்கு உலருணப் பொதிகள் வழங்கும் நிகழ்வு தெலியாகொன்ன ஜும்ஆப் பள்ளிவாசல் தலைவர் பிஸ்ரூல் முனவ்பர் தலைமையில் இன்று இடம்பெற்றது.
இதில் பிரதமர் மஹிந்த ராஜாபக்ஷவின் முஸ்லிம் விவகார இணைப்புச் செயலாளர் அப்துல் சத்தார் கலந்து கொண்டு சிறப்பித்தார். அத்துடன் குருநாகல் பிரதேச செயலாளர் அலுவலக உத்தியோகஸ்தர்கள் பள்ளிவாசல் நிர்வாகிகள் எனப் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
சுகாதார விதி முறைகளுக்கு இணங்க இப்பகுதியில் உள்ள சகல சிங்கள முஸ்லிம் தமிழ் முதலிய அனைத்து குடும்பங்களுக்கு ஒவ்வொரு வீடு வீடாகச் சென்று இந்த உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த மொத்த உலருணவுத் தொகையின் பெறுமதி 45 இலட்சமாகும். விசேடமாக இதற்கு பங்களிப்பு நல்கும் வகையில் செல்வந்தர் ஒருவர் அரசி 10 கிலோ கிராம் விகிதம் 1500 பொதிகள் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
(இக்பால் அலி)