பயணக் கட்டுப்பாட்டை மீறிய குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் மீன் வியாபாரிகள் கைது!

நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட கொக்குவில், குளப்பிட்டி சந்திக்கு அருகில் மீன் வியாபாரிகள் 6 பேர், யாழ்ப்பாணம் பொலிஸரால் இன்று (13) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தற்போதைய பயணக் கட்டுப்பாட்டு காலத்தில் நடமாடும் வியாபாரத்துக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ள நிலையில், தேவையற்ற வகையில் மக்களை ஒன்றுதிரட்டி மீன் வியாபாரம் செய்தனர் என்ற குற்றச்சாட்டில் பொலிஸார் இவர்களைக் கைதுசெய்துள்ளனர்.

அத்துடன் இவர்கள் வியாபாரத்துக்கென வைத்திருந்த மீன்கள் மற்றும் அது சம்பந்தமான வியாபாரப் பொருட்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

நல்லூர் பிரதேச சபையால் ஏற்கனவே மக்கள் ஒன்றுகூடும் வகையில் வியாபாரம் செய்ய வேண்டாமென எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், தொடர்ச்சியாக குறித்த பகுதியில் வியாபாரம் மேற்கொண்டமையினாலேயே இன்று குறித்த மீன் வியாபாரிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.