கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 5 லட்ச ரூபாய் செலுத்தும் திட்டம்… இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

தமிழ்நாடு :  தமிழ்நாட்டில், கொரோனாவால் பெற்றோர்களை இழந்து, ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளின் பெயரில் தலா 5 லட்சம் ரூபாய் வைப்பீடு செலுத்தவும், அவர்களுக்கு18 வயது நிறைவடையும் போது வட்டியுடன் முழு தொகையும் வழங்கவும் முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த மாதம் 29ம் தேதி உத்தரவிட்டார். அத்துடன் பட்டப் படிப்பு வரையிலான கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் அரசே ஏற்கும் என்றும், பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தையின் தாய் அல்லது தந்தைக்கு உடனடியாக 3 லட்சம் ரூபாய் நிவாரணமும், அரசு காப்பகம் அல்லது விடுதிகள் மற்றும் உறவினரின் ஆதரவில் வளரும் குழந்தைகளுக்கு, அவர்களின் 18 வயது வரை மாதத்தோறும் 3000 ரூபாய் பராமரிப்புச் செலவுக்காக வழங்கப்படும் என்றும் கூறினார்.

இந்த நிலையில், ஆதரவற்ற குழந்தைகளுக்கு அவர்களது வங்கி கணக்கில் வைப்பு நிதியாக 5 லட்ச ரூபாய் செலுத்தும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். காலை 11 மணியளவில் தலைமைச் செயலகத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Leave A Reply

Your email address will not be published.