விக்டோரியா நீர்த்தேகத்தை அண்மித்த பகுதியில் சிறு அளவிலான நிலநடுக்கம்.
விக்டோரியா நீர்த்தேகத்தை அண்மித்த குமாரிகம பகுதியில் சிறு அளவிலான நிலஅதிர்வொன்று பதிவாகியுள்ளது.
அதன்படி ,இந்த நிலஅதிர்வு 1.94 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் அகழ்வு பணியகத்தின் தலைவர் அநுர வல்பொல தெரிவித்துள்ளார்.
நேற்று 4.39 அளவில் இந்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளது என்பதுடன் எவ்வாறாயினும், இந்த நிலஅதிர்வு குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை என அவர் கூறியுள்ளார்.