மக்களின் கழுத்தை நெரிக்கின்றது அரசு! – சஜித் சாடல்

“பாரிய கொரோனா நோய்த் தொற்று நிலைமைக்கு மத்தியில் எரிபொருளின் விலையை அதிகரித்து மக்களின் கழுத்தை அரசு நெரிக்கின்றது. இதன்மூலம் அரசின் மனிதாபிமானமற்ற தன்மை வௌிப்படுகின்றது.”

இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“கடந்த ஆட்சிக் காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட எரிபொருள் விலைச் சூத்திரத்துக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், உலக சந்தையில் எரிபொருளின் விலை பாரியளவில் குறைவடைந்த 2020ஆம் ஆண்டில் அதன் அனுகூலம் மக்களுக்குக் கிடைத்திருக்கும்.

உலகின் மிகவும் அபாயகரமான தொற்று நோயை நாடு எதிர்நோக்கியுள்ள சந்தர்ப்பத்தில், எரிபொருளின் விலையை அதிகரிக்காமல் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு அரசு செயற்பட்டிருக்க வேண்டும்.

எரிபொருளின் விலை அதிகளவில் அதிகரிக்கப்பட்டதை அடுத்து, நாட்டில் அனைத்துத் துறைகளிலும் விலையேற்றம் இடம்பெறுவதைத் தடுக்க முடியாது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.